பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காந்திபுரம் அருகே ஆர்ப்பாட்டம்

கோவை : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை :  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க., மற்றும் இடதுசாரி கட்சிகள் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவைத் தெரிவித்தன. அதன்படி, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க, சி.பி.ஐ., சி.பி.எம்., உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் காங்கிரஸ், மாவட்ட தலைவர் மயூரா ஜெயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...