திருப்பூர்: பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்தியா முழுவதும் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்த போரட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அங்குள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கவில்லை.

இதனால் ரூ.50 கோடி வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள பாத்திர தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் 7 டன் மதிப்பிலான எவர்சில்வர், செம்பு, பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் வழக்கம் போல் செயல்படுகின்றன. 20 சதவீத தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் கால் டாக்சிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்களும் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.