பாரத் பந்த் : திருப்பூர், நீலகிரியில் கடைகள் அடைப்பு; கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

திருப்பூர்: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:  பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் பாரத் பந்திற்கு வியாபாரிகள் சங்கம், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் மற்றும் வடக்கை கார்கள் இயங்கவில்லை.



இந்த சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மடத்துக்குளத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பியதுடன், திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலான கடைகள் அடிக்கப்பட்டதுடன், வாகனங்கள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி. கூடலூர் போன்றப் பகுதிகளில் ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள். லாரிகள், மினி பஸ்கள் இயங்கவில்லை.



அரசு பேருந்துகளில் ஆளும் கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தினர் தவிர மற்றவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டு காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...