கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்தும் 'பாரத் பந்த்'க்கு ஆதரவு தெரிவித்து கோவையில் மாநகரில் 12 தொழிற்சங்கங்கள் ஆதரவுடன் 12 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கவில்லை.
கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்தும் 'பாரத் பந்த்'க்கு ஆதரவு தெரிவித்து கோவையில் மாநகரில் 12 தொழிற்சங்கங்கள் ஆதரவுடன் 12 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கவில்லை.
இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் நம்மிடம் கூறுகையில், "பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும். கோவை மாநகரில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கள் இனைந்து நடத்தும் இந்த போராட்டத்தில் கோவை சார்பில் 12 தொழிற்சங்கங்கள் பங்குபெறுகின்றன. வெளிநாடுகளுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை மத்திய அரசு ஏற்றுமதி செய்கிறது. உள்நாட்டு மக்களை வஞ்சிக்கிறது." என்றார்.