EXCLUSIVE: 7 பேர் விடுதலை : சி.பி.ஐ சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன்னாள் தலைவர் கார்த்திகேயன் வரவேற்பு

தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறித்த கேள்விக்கு வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ள அவர் "ரொம்ப நல்ல செய்தி" என்றும் "விடுதலை செய்ய வேண்டியது தான் முறை" என்றும் தெரிவித்தார்.


கோவை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்ததற்கு சி.பி.ஐ சிறப்பு புலனாய்வு குழுவின் முன்னாள் தலைவர் கார்த்திகேயன் கோவையில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கோவை நன்னெறி கழகத்தின் 62-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்துஸ்தான் கல்லூரி அரங்கில் சிறப்பு வாய்ந்த விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற டி.ஆர் கார்த்திகேயனுக்கு நன்னெறி செம்மல் விருது வழங்கப்பட்டது.



இவர் கோவை அருகே உள்ள தேவராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று கடந்த 1964-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார் கார்த்திகேயன். காவல் துறையில் பல்வேறு உயர் பதவிகளில் பொறுப்பு வகித்த இவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ.,யின் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராகவும் இருந்தார்.



நிகழ்ச்சியில் நமது சிம்பிளிசிட்டி செய்திக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறுகையில், "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இது ரொம்ப நல்ல செய்தி. விடுதலை செய்ய வேண்டியது தான் முறை.

நான் பல இடங்களில் விருது வாங்கி உள்ளேன். ஆனால், சொந்த மண்ணில் வாங்கிய விருது அதிக மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், கிருஷ்ணராஜ் வானவராயர், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்கள் வாய்மையே வெல்லும் என்னும் நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினர்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...