நாளை பந்த் : கோவையில் அரசியல் கட்சியினர், தொழிற்சங்கங்கள் ஆதரவு

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாளை நடைபெறும் பாரத் பந்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாளை நடைபெறும் பாரத் பந்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை அகில இந்திய அளவிலான மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல்,-டீசலுக்கு அளித்து வந்த மானியத்தை மத்திய அரசு குறைத்ததுடன், விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனை தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் விலையை நிர்ணயம் செய்தது.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல், 83.58-க்கும், டீசல் 76.64-க்கும் விற்பனையாகிறது. இதனால், மக்கள் கடும் சுமைக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து காங்கிரஸ், அகில இந்திய அளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தி.மு.க., ம.தி.மு.க., மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆட்டோ, சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகள் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அ.தி.மு.க., பா.ஜ.க., தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

விலையேற்றம் எதிர்ப்பு உள்ள போதும் பெட்ரோல், பங்குகள் பொதுமக்கள் நலன் கருதி திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போராட்டத்தின் காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...