கோவையில் நோயாளியுடன் நடு வழியில் பழுதான 108 ஆம்புலன்ஸ்

கோவை: மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து, 10 வயது சிறுவனை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது 108 ஆம்புலன்ஸ் நடு வழியில் திடீரென பழுதாகி நின்றது.

கோவை: மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து, 10 வயது சிறுவனை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது 108 ஆம்புலன்ஸ் நடு வழியில் திடீரென பழுதாகி நின்றது.

கோவை அரசு மருத்துவமனை;

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வரும் நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

தினமும் 7 ஆயிரம் பேர் வரை வெளி நோயாளிகளும், 2000 ஆயிரம் பேர் வரை உள் நோயாளிகளும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல 108 ஆம்புலன்ஸ் மூலம் தினமும் திருப்பூர், நீலகிரி போன்ற அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு, 15-க்கும் மேற்பட்ட நோயாளிகளை அழைத்து வருகின்றனர்.

ஆம்புலன்ஸ்கள்

கோவை மாவட்டத்தில் மொத்தம் 37 அவசர சேவை (108) ஆம்புலன்ஸ்கள் இயங்கிவருகிறது. இதில் 29 பெரிய ஆம்புலன்ஸ்களும், 3 இரண்டு சக்கர வாகன ஆம்புலன்ஸ்களும், 3 ஜீப் ஆம்புலன்ஸ்களும், 2 பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்களும் உள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 24, அவசர சேவைக்கான 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளது. இதில் பிரதானமாக திருப்பூர்-கோவை அரசு மருத்துவமனைக்கு TN 20 G 2092 என்ற எண் கொண்ட ஆம்புலன்ஸ், தினமும் 5 முறைக்கு மேல் நோயாளிகளுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு வருகிறது.



அலட்சியம்

தினமும் 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணமாகும் TN 20 G 2092 என்ற எண் கொண்ட ஆம்புலன்ஸ், சுமார் ஒருவார காலமாகவே பழுதாகி உள்ளதாக நிர்வாகத்திற்கு 108 வாகன ஓட்டுநர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திருப்பூரில் உள்ள ஒரு ஒர்க்‌ ஷாப்பில் இந்த வாகனம் தற்காலிகமாக சரிபார்க்கப்பட்டது.

அதேபோல, ஒர்க்‌ ஷாப்பில் உள்ள மெக்கானிக் இந்த வாகனத்தில் பெரிய பழுது ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆகவே இதை உடனடியாக சர்வீஸ் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஓட்டுனர் மூலம் மீண்டும் வாகனத்தின் நிலை குறித்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், நிர்வாக தரப்பில் முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதேபோல எந்த நேரத்திலும் எவ்வழியிலும் நிற்கக் கூடிய சூழலில் இருந்த இந்த ஆம்புலன்ஸ் தொடர்ந்து பொதுமக்களின் அவசரத் தேவைக்கு ஆபத்தான சூழலில் இயக்கிக் கொண்டிருந்தது.



பழுதான ஆம்புலன்ஸ்

இந்தநிலையில், நேற்று திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 10 வயது சிறுவனுக்கு மேல் சிகிச்சை கொடுப்பதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்படி நோயாளியுடன் பாப்பம்பட்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென 108 ஆம்புலன்ஸ் அதிக சத்தம் எழுப்பி பழுதாகி நின்றது.

இதனால் அதிர்ந்து போன ஓட்டுனர் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஆம்புலன்சில் இருந்த நோயாளியை அருகே உள்ள மற்றொரு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மதியம் சுமார் 12 மணியளவில் சாலையில் நின்ற 108 ஆம்புலன்ஸ் கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் நின்ற இடத்திலேயே இருந்தது. இதன் பின்னரே வாகனத்தை பழுது பார்த்து ஒர்க்‌ ஷாப்பிற்க்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ரகுமான் கூறுகையில், "108 ஆம்புலன்ஸ் அடிக்கடி பழுதாவதும், நோயாளிகளுடன் நடுவழியில் நிற்பதும் வேதனையளிக்கிறது. மேலும், ஆக்சிஜன் சிலிண்டர் (O2 ) இல்லாததாக தொடர் புகார்களும் எழுகின்றன.



இது நோயாளிகளின் உயிர் காக்கும் பொன்னான நேரத்தை வீணடிக்கும் செயல். ஒரு வேளை சாலை விபத்தில் ஆபத்தான சூழலில் இருப்பவருக்கு நிகழ்ந்திருந்தால் உயிரிழப்பே ஏற்பட்டிருக்கும். ஆகவே மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்களின் தரத்தை கவனிக்க வேண்டும். அப்படி தொடர்ந்து அரசின் பார்வை அந்த பக்கம் இருந்தால் தான் நிர்வாகம் சரியாக செயல்படும் என தொடர் அலட்சியங்கள் காட்டுகிறது.

ஆகவே, 108 ஆம்புலன்ஸ்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக நிர்வாகம் சரி செய்து பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற பொன்னான நேரத்தை பயன்படுத்த வேண்டும்." என்றார்.

ஆபத்தான சூழலில் உள்ள மனித உயிர்களைக் காப்பாற்ற அரசால் கொண்டுவரப்பட்ட இந்த 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஒரு சில நேரங்களில் சரியான பராமரிப்பு இல்லாமல் பழுதாகி நடுவழியில் நிற்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

ஆகவே, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தொடர்ந்து முறையான பராமரிப்பு செய்து பொதுமக்களின் விலை மதிப்பில்லா உயிரைக் காப்பாற்ற பொன்னான நேரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...