பள்ளிக்கல்வி துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் பெரிய உலக தலைவர் அல்ல - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

கோவை: பள்ளிக்கல்வி துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் பெரிய உலக தலைவர் அல்ல எனவும், ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " தற்போதைய அரசு தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருகிறது. தமிழகத்தின் அனைத்து துறைகளும் இந்தியாவிற்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தலா 20 லட்ச ரூபாய் மதிப்பில் அடுத்த மாதம் இறுதிக்குள் 60 அரசுப் பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் துவங்கப்படும்.

மேலும், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் பெரிய உலக தலைவர் அல்ல. ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம்." என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...