நீலகிரி : நாடு முழுவதும் உள்ள 2,000 பார்மஸி கல்லூரிகளில் மலிவு விலை மருந்தகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய பார்மஸி கவுன்ஸிலின் தலைவர் பி. சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : நாடு முழுவதும் உள்ள 2,000 பார்மஸி கல்லூரிகளில் மலிவு விலை மருந்தகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய பார்மஸி கவுன்ஸிலின் தலைவர் பி. சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உதகையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஜன் அவுஷாதி மருந்தகங்களில் தரமான மருந்துகள் உரிய தரக்கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு தரசான்றிதழுடன் விற்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு அனைத்து மருந்துகளும் கிடைப்பதை உறுதி செய்யவே இத்திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தியாவில் பார்மஸி துறை நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. மருந்து உற்பத்தி ரூ. 1,20,000 கோடி அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதில், ரூ. 60 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகில் பிறக்கும் அனைத்து குழந்தையும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்புஊசி போடப்படுகிறது. அந்த அளவிற்கு தரமான மருந்துகளைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் பார்மஸி கவுன்ஸிலின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்ற வகையில் இந்த கவுன்ஸிலின் செயல்பாடுகள் டிஜிட்டல் மையமாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், நாட்டிலுள்ள 2,000 பார்மஸி கல்லூரிகள் தங்களது அங்கீகாரத்தைப் புதுப்பிக்க இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம், என்றார்.