214 நாட்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து குப்புசுவாமிநாயுடு மருத்துவமனை மருத்துவர்கள் உலக சாதனை

கோவை : பிறந்து 214 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து ஜி. குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் மருத்துவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.



கோவை : பிறந்து 214 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து ஜி. குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் மருத்துவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். 



திண்டுக்கல்லைச் சேர்ந்த பிறந்து 214 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை வயிற்றுவலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்தது. இதையடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர்கள் கோவையைச் சேர்ந்த ஜி. குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் பித்தப்பையில் கற்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர், அதனை லேபரோஸ்கோபிக் சோல்சிஸ்டெக்டோமி அறுவை சிகிச்சையின் மூலம் அதனை நீக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். 

ஆனால், இந்த அறுவை சிகிச்சைக்கு பச்சிளம் குழந்தையின் உடல் ஒத்துழைப்பது மருத்துவர்களுக்கு கடும் சவாலாக இருந்தது. இதைத் தொடர்ந்து, தினேஷ்குமார் தலைமையிலான மருத்துவர்கள் கடந்த 6-ம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர். சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நன்கு ஆரோக்கியத்துடன் உள்ளது. 

ஜி. குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனை மருத்துவர்களின் இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை கின்னஸ் சாதனைக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பெல்காமில் கடந்த ஆண்டு பிறந்து 244 நாட்கள் ஆன குழந்தைக்கு லேபரோஸ்கோபிக் சோல்சிஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை செய்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...