பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடக்கம்: திங்கட்கிழமை முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு

கோவை: பில்லூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை: பில்லூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.



மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் காலை முதல் மாலை வரை நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் பங்கேற்று பரிசல் பயணம் செல்லவும், பசுமை காடுகளையும், அதில் வாழும் வன உயிரினங்கள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கவும் செய்யலாம். 

இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த மாதம் பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. இதன் பின்னரும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. 

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 57,000 கன அடி வரை உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. 

இதனால், பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பகுதி முழுவதுமாக நீரில் மூழ்கியது. இதனையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்தது. 

மேலும், ஆன்லைன் மூலம் பரளிக்காடு சூழல் சுற்றுலாவிற்கு செய்யப்பட்டு வந்த முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த இருவார காலமாக மழையின் அளவு குறைந்து அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. இதனையடுத்து, சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பகுதி சீர் செய்யப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. வரும் திங்கள் முதல் வழக்கம் போல் சூழல் சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் வனத்துறையிடம் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...