திருப்பூர்: பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வரும் நாளை மறுதினம் நடக்கும் முழு அடைப்பு (செப்.,10) போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்க திருப்பூரில் நடைபெற்ற அனைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வினை கண்டித்து வருகிற 10-ம் தேதி தேசிய அளவில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவளித்து வரும் நிலையில், திருப்பூரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வரும் 10-ம் தேதி நடைபெறுகின்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில், அன்றைய தினம் அனைத்து தொழிற்சங்கங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ, வேன் ஆகியவை இயக்காமல் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.