கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் நுரையீரல் நோய் தொடர்பான இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது.

பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியின் சுவாச மருத்துவத்துறையின் 25-ம் ஆண்டு மருத்துவ சேவையை வழங்கி வருவதை முன்னிட்டு TAPPCON 2018 என்ற தலைப்பில் 4-ம் ஆண்டு நுரையீரல் நோய் தொடர்பான இரண்டு நாள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பி.எஸ்.ஜி., கலையரங்கில் இன்று தொடங்கிய மாநாட்டை என்.ஏ.சி.ஓ.,வின் தேசிய ஆலோசகர் டாக்டர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார். இதில், 100 முதுகலை மாணவர்கள் உள்பட 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதுகலை முடித்த பயிற்சி மாணவர்களுக்கும், இளம் மருத்துவர்களுக்கும் சிகிச்சை முறைகள் குறித்து தெரிந்து கொள்ளச் செய்வதே இந்த மாநாட்டின் நோக்கம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனுபவமிக்க மருத்துவர்கள் கலந்து கொண்டு, இத்துறையில் உள்ள அதிநவீன சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைக்க இருக்கின்றனர்.