நீலகிரி : கூடலூர் அருகே யானை தாக்கியதில் படுகாயமடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

கூடலூர் அருகே சீபோர்த் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சரோஜினி (72). இன்று அதிகாலை பேருந்தில் ஏறுவதற்காக வந்தபோது, அங்கு வந்த காட்டு யானை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், சரோஜினியை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.