கோவையில் நிதி ஒதுக்கீடு செய்தும், தூர்வாரப்படாத ராஜவாய்க்கால்

கோவை: கோவையில் பிரதான வாய்க்காலான ராஜவாய்க்காலை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை எந்தவித ஆரம்பகட்ட பணிகளை கூட மேற்கொள்ளாமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் பிரதான வாய்க்காலான ராஜவாய்க்காலை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை எந்தவித ஆரம்பகட்ட பணிகளை கூட மேற்கொள்ளாமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தில் 10 அடி அகலம் கொண்ட ராஜ வாய்க்காலில் பாய்ந்தோடும் நொய்யல் ஆற்று நீர், முத்துகவுண்டம்பாளையம்புதூர் குளத்தின் மூலம் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. இந்தக் கால்வாயின் மூலம் 360 ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் 100 விவசாய குடும்பங்கள் பலன் பெறுகின்றன. இதனைப் பயன்படுத்தி சோளம், தென்னை போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். இந்த நிலையில், இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து புற்கல் மற்றும் மண் போன்றவை மூடிவிட்டன. 



இது குறித்து உள்ளூவாசி வி. வாசுதேவன் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் இதனை வெற்றிகரமாக தூர்வாரி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக இந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. எனவே, இந்த வாய்க்காலை தூர்வாரக் கோரி உரிய அதிகாரிகளிடம் முறையிட்டால், மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகப் பதிலளிக்கின்றனர். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்தும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த வாய்க்காலை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை ஆரம்பகட்ட பணிகளே மேற்கொள்ளாமல் இருப்பது அண்மையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தெரிய வந்தது," இவ்வாறு அவர் கூறினார். 



இந்த வாய்க்காலை தூர்வார மகாத்மா காந்தி திட்டத்திற்கு ரூ. 11,43,000 ஒதுக்கப்பட்டுள்ளது. 8,273 நாட்களில் நாள்தோறும் ரூ.205 ஊதியம் என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி இந்தப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இதுவரை எந்தவிதமான கான்கிரீட் தளமும் அமைக்கவில்லை. இதனால், அதே நிலையில் தான் இந்த வாய்க்கால் உள்ளது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...