கோவை: கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மைதானத்தை மாணவர்கள் பயன்படுத்த மாற்றுவழி ஏற்படுத்தித் தருமாறு பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரனுக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியர் கடிதம் எழுதியுள்ளார்.
கோவை: கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மைதானத்தை மாணவர்கள் பயன்படுத்த மாற்றுவழி ஏற்படுத்தித் தருமாறு பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரனுக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியர் கடிதம் எழுதியுள்ளார்.
கோவை - பொள்ளாச்சி இடையே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அங்குள்ள கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், சாலையைக் கடந்து சென்று, விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் மைதானத்தை தற்காலிகமாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரனுக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை அவர் எம்.பி.,யிடம் நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது, சமூக ஆர்வலர் மணி என்பவரும் உடனிந்தார். அந்த கடிதத்தில், இரும்புகளால் ஆன தடுப்புகளை பள்ளியின் முன்பு வைத்து மாணவர்கள் சாலையை கடந்து மைதானத்திற்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அப்போது, கிணத்துக்கடவு அரசு பள்ளி மாணவர்கள் மைதானத்தைப் பயன்படுத்த முடியாத நிலை குறித்த பிரச்சினையை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், அடுத்த வாரம் கண்டிப்பாக பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு நடத்துவேன் எனவும் எம்.பி., மகேந்திரன் உறுதியளித்தார்.