கோவை : சைமா எனப்படும் தென்னிந்திய ஆலைகளின் கூட்டமைப்பு சார்பில் டெக்ஸ்பின் 2018 என்ற மாநாடு கோவையில் நடைபெற்றது.
கோவை : சைமா எனப்படும் தென்னிந்திய ஆலைகளின் கூட்டமைப்பு சார்பில் டெக்ஸ்பின் 2018 என்ற மாநாடு கோவையில் நடைபெற்றது.
'சிறந்த திருப்புமுனை' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், வாய்ப்புகள் மற்றும் அடுத்த தலைமுறைக்கான தலைமைப் பண்பு போன்றவை முக்கிய கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் ஏ. வெள்ளையன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கோவை, மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் புதுமை பற்றிய பற்றாக்குறை மற்றும் குடும்பம் சார்ந்த தொழில்களை மூடவேண்டும் போன்ற மனநிலையால் வர்த்தகங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறினார்.

இந்த மாநாட்டில் எல்ஜி எக்கியூப்மென்ட்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் ஜெய்ராம் வரதராஜ் கலந்து கொண்டு பேசினார். "சிறந்த வர்த்தகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துவது ஓர் இரவில் செய்யும் காரியமல்ல. நீண்ட நாள் முயற்சிகளின் பிரதிபலனமாகும். சிறந்த வணிகம் என்பது கால வரையறையை நியமித்து செய்ய முடியாது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்றமே ஆகும். அதனை எளிதில் அடைந்து விடமுடியாது," என்றார்.
