நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மாவோஸ்ட்டுகளின் நடமாட்டம் முற்றிலும் இல்லை என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் மாவட்டமாக திகழ்ந்து வரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பழங்குடியின கிராமங்களில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் போலீசார் சோதனை சாவடி அமைத்து தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் முற்றிலுமாக இல்லை. தொடர்ந்து ஒரு ஆய்வாளர் 13 பேர் அடங்கிய ஒரு குழுவும், துணை ஆய்வாளர் மற்றும் 13 பேர் கொண்ட 2 குழுக்கள் என மொத்தம் 3 குழுக்கள் அமைத்து எல்லைப் பகுதிகளில் சோதனைசாவடிகள் மூலம் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 3 குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்," என்றார்.