பிரிக்கால் நிர்வாகம் - தொழிற்சங்கங்களின் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

கோவை: பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

கோவை: பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் ஆலை நிர்வாகம் பகுதி கதவடைப்பு என்ற பெயரில் 143 தொழிலாளர்களைக் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் வேலையில் இருந்து நீக்கியது. 

அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பிரிக்கால் தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 18 நாட்களை கடந்துள்ளது. இந்த விவகாரத்தில் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.



இதனிடையே, பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, பகுதி கதவடைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்யப்பட்ட 143 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். 

ஆனால், பிரிக்கால் நிர்வாகம் அதனை ஏற்க மறுத்ததால், எந்தவித உடன்பாடும் எட்டாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, பிரிக்கால் நிர்வாகம், தொழிலாளர் துறை மற்றும் தொழிலாளர் சங்கங்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

இது தொடர்பாக பிரிக்கால் நிர்வாகத்தின் தலைமை மக்கள் அதிகாரி ஆர். மலர்வண்ணன் கூறியதாவது :- பிரிக்கால் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதனை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், தற்போது பகுதி கதவடைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்யப்பட்ட 143 தொழிலாளர்களை எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி மீண்டும் பணியமர்த்த வலியுறுத்துகின்றனர். அவர்களில் 26 பேருக்கு ஏற்கனவே, பிரிக்கால் நிர்வாகம் பணி வழங்கியுள்ளது. 



ஏற்கனவே, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கம் பெரும்பான்மையுடையது என எழுத்துப்பூர்வமாக தொழிலாளர் நலத்துறைக்கு கடிதம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், தொழிற்சங்கத்தினர் ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட வேண்டும் என முடிவு செய்துள்ள நிர்வாகம், தங்களது விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. ஆனால், தங்களது கோரிக்கைகளை நிறைவேறாத வரையில் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர், என்றார். 

இதேபோல, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது :- பிரிக்கால் நிர்வாகம் தொழிற்சங்கத்தை கலைக்கவே முயற்சி செய்கிறது. 143 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டது. 

அதேபோல, தொழிற்சங்கத்தினர் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட்டு விட்டதால், மீண்டும் ரகசிய வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி வருகிறோம். மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான ஊதியத்தை வழங்க நிர்வாகம் மறுக்கிறது. எனவே, இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் மூலம் அணுக முடிவு செய்துள்ளோம், எனக் கூறினர். 

2-வது கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், வரும் 14-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பான செய்திகளை படிக்க

உடன்பாடின்றி முடிவடைந்த பிரிக்கால் நிர்வாகம் - தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிக்கால் ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...