திருப்பூர்: மத்திய, மாநிலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பிறப்பித்த நில எடுப்பு அரசு ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் அவிநாசிபாளையம் கிராமம் உள்ளது. அங்குள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.
அதன்படி, கடந்த 2007-ம் ஆண்டு அவிநாசிபாளையம் பிரிவு சுங்கத்தில் தொடங்கி, ராமசாமி கோயில் பிரிவு வரை விளைநிலங்களை கைய்யகப்படுத்தி 1 கி.மீ., தூரத்துக்கு மட்டும் 6 வழிச்சாலையாக மாற்ற மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதன்மூலம் கரூர்- கோவை சாலை அப்பகுதியில் நேராக போக்குவரத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இழப்பீடு தொகையை வாங்க விவசாயிகள் மறுத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த வீடுகள், தென்னை மரங்கள், கிணறுகள் மற்றும் கடைகள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டு 30,700 சதுர மீட்டர் பரப்பு நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக வழக்கறிஞர் ப.முருகேசன், நடராஜன் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த 15 விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு அவிநாசிபாளையம்பிரிவு சுங்கம் பகுதியில் இருந்து ராமசாமி கோயில் பிரிவுக்கு இடைப்பட்ட பகுதியில் தேசிய நில எடுப்பு சட்டப்படி நில ஆர்ஜிதம் செய்ய பிறப்பித்த அரசு ஆணைகளில் குளறுபடி உள்ளதாகவும், முறைப்படியான அறிவிப்புகள் விவசாயிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்றதுடன் மத்திய, மாநில தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பிறப்பித்த அனைத்து அரசு ஆணைகளையும் ரத்து செய்து கடந்த நான்கு நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.
இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.