சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி, மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்ட மனுவை இன்று திரும்பப் பெற்றுக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி நளினி, வேலூர் மத்திய பெண்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் அவருக்கு சிறையின் உள்ளேயே பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஹரித்ரா என்று பெயரிட்டார்.
தற்போது லண்டனில் வசிக்கும் மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்து வைக்க நளினி முடிவு செய்தார். இதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி பரோல் கேட்டு நளினி, தமிழக அரசு மற்றும் சிறைத்துறை தலைவருக்கு மனு அனுப்பினார். ஆனால், பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்தார். இதனிடையே, மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டு, நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளுக்கு திருமண ஏற்பாடு செய்ய 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நளினி வாபஸ் பெற்றார். இதையடுத்து, அந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து ஆளுநர் முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் பரோல் மனுவை நளினி வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.