நீலகிரி: நீலகிரி மாவட்டம் கேத்ரின் நீர் வீழ்ச்சி அருகே கரடி உலா வருவதால் சுற்றுலாப் பயணிகள், தோட்ட தொழிலாளர்கள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கேத்ரின் நீர் வீழ்ச்சி அருகே கரடி உலா வருவதால் சுற்றுலாப் பயணிகள், தோட்ட தொழிலாளர்கள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோத்தகிரி அருகே உள்ள கேத்ரின் நீர் வீழ்ச்சி சுற்றுலாத்தலப் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள் நடுவே கரடி உலா வருவதைக் கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதனை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது அந்த கரடி தோட்ட தொழிலாளர்களை விரட்டியது.
இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள், தேயிலை பறிப்பதை நிறுத்திவிட்டு வெளியே சென்றனர். இது குறித்து தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கூறுகையில், "கரடிகளிடம் இருந்து விவசாயிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என வனத்துறை உயர் அதிகாரிகள் உறுதி அளித்தனர். தொடர்ந்து தனிக்குழு அமைத்து கரடிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். இருப்பினும் கரடியை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்தும் வரை யாரும் தேயிலை பறிக்கச் செல்வதில்லை."என்றனர்.
இந்த சூழலில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.