கோவை: கோவை - அவினாசி சாலையில் போக்குவரத்து விதிகளை கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

தமிழ்நாடு போக்குவரத்து காவலர்கள் மற்றும் எல்.ஐ.சி., ஊழியர்கள் இணைந்து போக்குவரத்து விதிகளை மதித்து வரும் வாகன ஓட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள எல்.ஐ.சி., பில்டிங் அருகே இன்று நடைபெற்றது. இதில், சாலையில் விதிகளை மதித்து ஹெல்மெட் அணிந்தும், அதேபோல காரில் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டி வருபவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

எப்படி விதியை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறதோ, அதேபோல விதியை மதித்து வரும் வாகன ஓட்டிகளுக்கும் பரிசளித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. விதிகளைப் பின்பற்றி வந்த வாகன ஓட்டிகள் 40-க்கும் மேற்பட்டோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல காவல்துறையிடமிருந்து பரிசுகள் வாங்குவதில் பொதுமக்களும் ஆர்வம் காட்டினர். இந்த நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் எல்.ஐ.சி., ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.