கோவை : லட்சுமி மில்ஸ் அருகே மரங்களை வெட்டிய குடியிருப்புவாசியிடம் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - அவினாசி சாலையில் உள்ள லட்சுமி பகுதியில் ஆனந்தாஸ் ஓட்டல் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள குடியிருப்பைச் சேர்ந்த பகுதிவாசி ஒருவர் அங்கிருந்த இரண்டு வேப்ப மரங்களை வெட்டியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சென்ற ஓசை அமைப்பைச் சேர்ந்த சையத், மரம் வெட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். ஆனால், மரம் வெட்டுவது தங்களது சொந்த விருப்பம், எங்களிடம் கேள்வி கேட்க உரிமை இல்லை என அந்த குடியிருப்புவாசி பதிலளித்துள்ளார்.

அப்போது, அங்கிருந்த ஒருசிலர், தங்களை அரசு அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டதுடன், மரம் வெட்டப்படுவது குறித்து வீடியோ எடுத்த சமூக ஆர்வலர் சையத்தின் செல்போனை பறித்துக் கொண்டனர். இதனால், சமூக நலன் தொடர்பான செயல்களுக்கு ஆதரவான சமூக ஆர்வலர்களின் கேள்வி கேட்கும் உரிமைகளையும் அதிகாரிகள் பறித்துக் கொண்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.