கேரளா: கேரளாவில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கறிக்கோழியின் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

தமிழகத்தில் வாராந்தோறும் சுமார் 70 லட்சம் பிராய்லர் கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து அவற்றை அதிகளவு இறக்குமதி செய்யும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும். வாராந்தோறும் சுமார் 39 லட்சம் கோழிகள் இறைச்சிக்காக கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இறைச்சிக் கோழிகள் ஏற்றுமதி செய்வது தடைப்பட்டது.
இந்த நிலையில், கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கறிக்கோழியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் ரூ.220-ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கோழிக்கறி, தற்போது பாதிக்கு பாதி சரிந்து ரூ.110 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று பண்ணை நிலவரப்படி, உயிருடன் கோழி கிலோ ரூ. 50-க்கு விற்கப்பட்டது.
துண்டிக்கப்பட்டுள்ள சாலை போக்குவரத்து சீர்செய்யப்பட்டால், அடுத்த வாரத்தில் மீண்டும் கோழியின் விலை உயரும் என கோழி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.