கோவை: ஓரினச்சேர்க்கை குற்றச் செயல் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்கள் அடிப்படை உரிமையை நிலைநாட்டியுள்ளதாக திருநங்கை கல்கி சுப்ரமணியம் கூறியுள்ளார்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதைக் குற்றமாக கூறும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377–வது பிரிவை உச்ச நீதிமன்றம் இன்று நீக்கியுள்ளது. இதனால், ஓரினச்சேர்க்கையாளர்கள் மகியழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து திருநங்கை கல்கி சுப்ரமணியம் கூறியதாவது:-
இந்த நீதிக்காக கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் போராடியிருக்கிறோம். இது ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதுகிறோம். உச்ச நீதிமன்றம் எங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ளது. இதன் மூலம், நாங்கள் விரும்பியவரை எங்களால் திருமணம் செய்து கொள்ள முடியும். இதே போல், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் உள்ள தடை சட்டமும் களையப்பட வேண்டும்.
சட்டத்தின் படி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். சமூக அங்கீகாரத்தின் வெற்றிக்கு தொடர்ந்து பயணிப்போம். எல்.ஜி.பி.டி சமுதாயத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான இனி செயல்படுவோம். இந்த தீர்ப்பின் அடிப்படையில் எங்களுக்கென இட ஒதுக்கீடு, திருமணம் மற்றும் தத்தெடுத்தல் உள்ளிட்ட சட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தீர்ப்பை கொண்டாடும் விதமாக வரும் சனிக்கிழமை கோவையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த கல்கி சுப்ரமணியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.