கோவை: கோவையில் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாகக் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதான உபா சட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக சென்னையைச் சேர்ந்த ஜாபர், இஸ்மாயில், சம்சூதின், சலாவுதீன், கோவையைச் சேர்ந்த ஆசிக் ஆகிய 5 பேரை கடந்த 1-ம் தேதி வெரைட்டிஹால் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன்சம்பத், அவரது மகன் ஓம்கார் பாலாஜி, இந்து முன்னணி மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி, சக்திசேனா தலைவர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், இஸ்மாயிலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், கொலை செய்ய உதவியதாக ஆட்டோ ஒட்டுநர் பைசல் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அன்வர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாகக் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதான உபா சட்டத்தை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், அவர்களை பொய் வழக்கில் போலீசார் கைது செய்திருப்பதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக புனைவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவே சென்னையில் இருந்து 4 பேர் கோவை வந்ததாகவும், ஆசிக்கின் இருசக்கர வாகனத்தில் எந்த ஆயுதமும் கைப்பற்றப்படாத நிலையில், கொலை செய்யும் நோக்கில் ஆயுதம் கைப்பற்றியதாக போலீசார் வழக்குப் பதிந்துள்ளதாக ஆசிக்கின் மனைவி பெளசியா தெரிவித்துள்ளார்.