டெல்லி: இந்தியாவில் குற்றச்செயலாக வரையறுக்கப்பட்டிருந்த ஓரினச்சேர்க்கை இனிமேல் குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை இந்திய தண்டனைச் சட்டத்தின் 377–வது பிரிவு குற்றமாக கூறுகிறது. இயற்கைக்கு மாறாக சேர்க்கையில் ஈடுபட்டால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இது தவிர அபராதமும் உண்டு. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜூலை மாதம் 17–ம் தேதி அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பு இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. காலை 11.15 மணியளவில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் வாசித்தனர். அப்போது, இந்தியாவில் குற்றச்செயலாக கருதப்பட்டு வந்த ஓரினச்சேர்க்கை இனிமேல் குற்றமில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.