நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்குப் பருவமழை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாக்கம் கூடலூர் போன்ற பகுதிகளில் அதிகம் இருந்த நிலையில், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் உதகை குன்னூர் போன்ற பகுதிகளில் ஏற்பட்டால் அதனை எதிர் கொள்வது குறித்து மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி சுப்ரமணி, இன்று குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "பருவமழைக் காலங்களில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது சவாலான காரியமாக உள்ளது. இதனை எதிர்கொள்ள மாவட்டம் முழுவதும் தற்போது 'பவர்-ஷா' என்ற மரம் அறுக்கும் நவீன கருவிகள் 14 உள்ளன. மேலும், அதி நவீன 4 கருவிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள மாவட்ட தீயணைப்புத் துறை தயாராக உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.