நீலகிரி : இயற்கை விவசாயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தனியார் சுயஉதவிக் குழுக்கள் சார்பில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி கண்காட்சி இன்று உதகையில் நடைபெற்றது.
நீலகிரி : இயற்கை விவசாயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தனியார் சுயஉதவிக் குழுக்கள் சார்பில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி கண்காட்சி இன்று உதகையில் நடைபெற்றது.
மலை மாவட்டமான நீலகிரியில் அதன் காலநிலைக்கேற்ப மலைதோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவ்வாறு விளைவிக்கப்படும் காய்கறி பயிர்களுக்கு ரசாயனம் கலந்த உரங்கள் தெளிக்கப்படுவதால், பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாய முறையை ஊக்குவிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலைத் துறையும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், உதகை தோட்டக்கலைத் துறை அரங்கில் இயற்கை விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையில் தனியார் சுயஉதவிக் குழுக்கள் சார்பில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில், கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற பல்வேறு வகையான காய்கறிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும், இயற்கை இடுபொருட்களான மீன்அமிலம், பஞ்சகாவியா, தசகாவியா, மூலிகை பூச்சி விரட்டி, ஒட்டுப்பொறி, ஊட்டமேற்றிய மூலிகை உரம் போன்றவைகளும், ஆர்கானிக் பொருட்களான சாமை, திணை, குதிரைவாலி, வரகு போன்ற பொருட்களும், பருப்பு வகைகளான உளுத்தம் பருப்பு, செம்மண் துவரம் பருப்பு, பாசிபருப்பு, நிலகடலை, கருப்பு கொள்ளு போன்றவைகளும், களிவகைகளான முளைகட்டிய உளுந்தங்களி, வரகுகளி, குதிரைவாலி களி போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இந்தக் கண்காட்சியை தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.