கோவையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அதிகாரி நியமனம்

கோவை: கோவையில் உள்ள வாக்காளர்களின் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக அதிகாரி வி. அருண் ராயை தமிழக தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.

கோவை: கோவையில் உள்ள வாக்காளர்களின் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக அதிகாரி வி. அருண் ராயை தமிழக தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. 



அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 1-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தற்போது 28,33,509 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,05,003 ஆண்களும், 14,28,218 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 288 பேரும் அடங்குவர். கோவை மாவட்டத்தில் 1.1.2019-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் 31.10.2018 வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கோவையில் உள்ள வாக்காளர்களின் பட்டியலில் திருத்தம் செய்ய வி. அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் வாக்காளர் பட்டியலையும் திருத்தம் செய்வார் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...