நல்லாசிரியர் விருது பட்டியலில் விதி மீறல் உள்ளதா ? - கலை ஆசிரியர் நலச்சங்கம்

கோவை: தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.

கோவை: தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.

அவ்வாறு வழங்கப்படும் விருது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரண்டு மாதங்களுக்கு முன்னே ஆசிரியர்களுக்கு சுற்று அறிக்கை அனுப்பி விண்ணப்பிக்க சொல்வது வழக்கம். விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு அதன் பெயரில் ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு தமிழக அரசால் நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

இதனிடையே, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் யார் யாருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என்கிற பட்டியல் இன்று வரை வெளியிடப்படாமல் ரகசியம் காப்பதாக தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் கூறுகையில், "பொதுவாக நல்லாசிரியர் விருதில் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு தலைமை ஆசிரியர்களுக்கே விருது வழங்கப்படுகிறது. அதே போல் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்கள் 4,000 பேர் இருக்கும் பட்சத்தில், நல்லாசிரியர் விருது பட்டியலில் ஒருவர் கூட இடம் பெறுவது இல்லை.



அதே போல் ஓவியம், இசை ஆசிரியர் ஒருவர் கூட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் இடம் பெற வாய்ப்பு வழங்குவது இல்லை. மாவட்ட தேர்வு குழு தேர்வு செய்த பட்டியல் அப்படியே மாநில தேர்வு குழு பரிந்துரை பட்டியல் வெளியிடுகிறது.

நாளை நல்லாசிரியர் விருது வழங்கப்படும் நிலையில் இன்று வரை கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் யார்? யார்? விருது வாங்கப் போகிறார்கள் என்கிற பட்டியல் வெளியிடப்படவில்லை. வெளிப்படைத் தன்மை இல்லாமல் விருது பட்டியல் ஏன் ரகசியம் காக்க வேண்டும். இதனால் இத்தகைய உயரிய விருது, உரிய ஆசிரியர்களுக்கு போய் சேர்வது இல்லை.

தேசிய நல்லாசிரியர் விருது என்பது மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசாணை கூறுகிறது. ஆனால், நல்லாசிரியர் விருது தகுதி இல்லாத ஆசிரியர்களுக்கு போய்விட கூடாது.

கடந்த முறை கனவு ஆசிரியர் விருது பட்டியலில் கூட தலைமை ஆசிரியர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து உள்ளனர். இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறக் கூடாது." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...