இந்து மத தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம்: 5 பேரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

கோவை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்ட 5 பேரையும் வரும் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



கோவை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்ட 5 பேரையும் வரும் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்து மத தலைவர்களின் பாதுகாப்பு, அச்சுறுத்தல் தொடர்பாக கோவை வெரைட்டி ஹால் சாலை சுந்தரம் வீதியில் வசித்து வரும் ஆசிக் என்பவரை காவல்துறையினர் அவரது நடவடிக்கைகள் குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில், ஆசிக்கை சென்னையிலிருந்து சந்திக்க 4 பேர் வருவதாக கிடைத்த தகவல் காவல்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கடந்த 1-ம் தேதி ரயில் மூலமாக வந்த நான்கு பேருடன், ஆசிக்கையும் பிடித்து 

காவல்துறையினர் விசாரித்தனர்.

அதேபோல 5 பேரிடமும் மத்திய உளவுப்பிரிவினரும், சிறப்பு புலனாய்வு பிரிவினரான எஸ்.ஐ.யு-வும் விசாரணை நடத்தினர். இப்படி நடந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

அதில், கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களாக இருப்பதாகவும் அதேபோல இவர்கள் இஸ்லாம் மதத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருபவர்களை கண்காணித்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்து. 

இந்நிலையில், கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா மாநில தலைவர் அன்புமாரி ஆகியோர் தொடர்ந்து இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருவதாக கோவையை சேர்ந்த ஆசிக், மற்ற 4 பேரிடமும் கூறியுள்ளார்.

அதனால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்யவும் வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தை ஆட்டோ மூலம் நிகழ்த்தவும், கொலைக்கு நண்பர்கள் உதவுவதாக தெரிவித்திருப்பதையும் வாக்குமூலத்தில் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இவர்கள் 5 பேரும் பேஸ்புக் மூலமாக நண்பர்கள் ஆகியுள்ளனர். 

இதையடுத்து, கோவையை சேர்ந்த ஆசிக், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இஸ்மாயில், சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, சலாவுதீன், சம்சுதீன் ஆகிய 5 பேர் மீது, 5 நபர்களுக்கு மேல் ஒன்றுகூடி சட்டவிரோதமாக செயல்படுவதற்கு சதி திட்டம் தீட்டுவது (143), கூட்டு சதி (120 பி), மற்றும் தடுப்புக்காவல் சட்டமான UAPA சட்டத்தின்படி அரசுக்கும், பொதுமக்களுக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய மதக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட உள்ளீட்டுப் பிரிவுகளான 15, 16, 18, 20, 38 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வெரைட்டி ஹால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவை விரைவு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை வருகின்ற ஐந்தாம் தேதி கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், வழக்கில் தொடர்புடைய ஆசிக்கின் நண்பர்களான கோவை குனியமுத்தூரை சேர்ந்த அன்வர், ஆட்டோ பைசல் ஆகிய இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...