கோவை : பேரூர் ஆதின மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பேரூர் ஆதின மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளாரி இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பொதுமக்கள், இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்த ராமசாமி அடிகளார், கொங்குநாட்டில் சமய வழிபாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி மறைந்துள்ளார். அவரது உடல் நடராஜர் சன்னிதி முன்பாக திருச்சமாதி நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாலை 7.15 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இளைய பட்டமாக இருந்த மருதாசல அடிகாளர் பெரிய பட்டமாக பொறுப்பேற்றார்.