மேற்குத்தொடர்ச்சி மலை மாநாட்டிற்கு ஆறு மாநில முதலமைச்சர்களை அழைக்க திட்டம்

கோவை: கோவையில் நடைபெற உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை மாநாட்டிற்கு ஆறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களை அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் நடைபெற உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை மாநாட்டிற்கு ஆறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களை அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



கோவை அண்ணாமலை அரங்கத்தில் அந்த அமைப்பினர் நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஜனார்த்தனா கூறுகையில், "ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 2-ம் தேதி வரை மூன்று நாட்கள் மேற்குத்தொடர்ச்சி மலை மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கு மேற்குத்தொடர்ச்சி மலை அமைந்துள்ள மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களையும் அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டின் இறுதி நாளில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரையும் அழைக்க உள்ளோம்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் பாதுகாப்புக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாதவ் காடில் மற்றும் கஸ்தூரிரங்கன் ஆகிய இருவர் சமீபத்தில் மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், மலைகள் உள்ள பகுதிகளில் 66 சதவீத காடுகள் இருக்க வேண்டும் என்றும், ஆனால், தற்போது 10 சதவீத காடுகளே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், காடுகள் அழிக்கப்படுவதே தொடரும் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்குக் காரணம் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்." என்றார்.

இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் கூறுகையில், " இந்த மாநாட்டில் வீதி நாடகங்கள் மற்றும் பல்வேறு போட்டிகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்." என்றார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...