பெண்கள், குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமில்லை

கோவை: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயமில்லை என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறியுள்ளது.


கோவை: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயமில்லை என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதிலும் உள்ள போலீசார் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கோவையைப் பொறுத்தவரையில் மாநகர போலீசார் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகளை வைத்துள்ளனர். மேலும், தொடர்ந்து விதிமுறையைப் பின்பற்ற தவறி, ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

அபராதம்

மோட்டார் வாகனச் சட்டம் 129-ன் படி, பொதுவாக இருசக்கர வாகன ஒட்டி ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்து போலீசாரிடம் சிக்கும்போது ரூ.100 அபராதமாக செலுத்த வேண்டும், தற்போது வெளியாகியுள்ள நீதிமன்ற உத்தரவின் படி, பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மட் அணியாமல் இருந்தால் அவரும் ரூ.100-ஐ அபராதமாக செலுத்த வேண்டும்.



அதன்படி, கோவையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகனத் தணிக்கை நடத்தி வருகின்றனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்னல் அமர்ந்திருப்பவர் ஹெல்மட் அணியாமல் வரும் போது அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மட்டும் 250-க்கு மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த உத்தரவு பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் இல்லை. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் ஹெல்மெட் அணியத் தேவை இல்லை என்கிறது மோட்டார் வாகனச் சட்டம். பிரிவு 417-A படி, இந்த விதிவிலக்கை அறிவித்துள்ளது மோட்டார் வாகனச் சட்டம்.



இது குறித்து கோவை மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் கூறுகையில், "இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஹெல்மெட் விதிவிலக்கு இருப்பது உண்மை தான். ஆனால், பாதுகாப்பு கருதி அவர்களும் ஹெல்மெட் அணிந்தால் நல்லது." என்றார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...