ரக்ஷாபந்தன் கொண்டாட்டத்துடன் கேரளாவில் சேவையைத் தொடர்ந்த கோவை மருத்துவக் குழு

திருச்சூர்: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கிய கோவையைச் சேர்ந்த மருத்துவக் குழு, அவர்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டது அனைவரிடத்தில் சற்று நிம்மதி அளித்துள்ளது.


திருச்சூர்: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கிய கோவையைச் சேர்ந்த மருத்துவக் குழு, அவர்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டது அனைவரிடத்தில் சற்று நிம்மதி அளித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கேரள மாநிலமே மழை மற்றும் வெள்ளத்தால் மூழ்கியது. இதனால், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியதால், பொதுமக்கள் முகாம்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கேரள அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 



இந்த நிலையில், நேற்று கோவையைச் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் சங்கத்தினர் சார்பில் 2 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினர். அதோடு, சிகிச்சைக்கு வந்தவர்களுடன் மருத்துவக் குழுவினர் ரக்ஷாபந்தன் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். ஒவ்வொருவருக்கும் கையில் கயிறு கட்டி தங்களது அன்பினை வெளிப்படுத்தினர்.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வேதனைக்குள்ளாகியுள்ள நிலையில், கேரள மக்களுக்கு இந்தக் கொண்டாட்டம் சற்று நிம்மதியளித்துள்ளது. 

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...