கோவை சி.எம்.சி., காலனி மக்களின் வாழ்க்கையை விளக்கும் ஆவணப்படம் வெளியீடு

கோவை : ஜனநாயக சுகாதாரப்பணியாளர் மய்யம் சார்பாக சி.எம்.சி காலனி மக்களின் வாழ்க்கையை விளக்கும் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை : ஜனநாயக சுகாதாரப்பணியாளர் மய்யம் சார்பாக சி.எம்.சி காலனி மக்களின் வாழ்க்கையை விளக்கும் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

வடகோவையிலுள்ள ஆதித்தமிழர் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 'நகர்ப்புற வளர்ச்சியும், பூர்வ குடிமக்களின் வாழ்விடங்களும்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில் கோவை நகரின் மையப்பகுதியான வெரைட்டி ஹால் சாலையில், பரம்பரையாக வாழ்ந்த இடத்தை விட்டு மக்கள் அகதிகளாக வெள்ளலூரிலுள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற்றியது. பேருந்து மற்றும் பணிகளுக்கு செல்ல முடியாத துப்புரவு பணியாளர்களின் நிலை மற்றும் அவர்களது குழந்தைகளின் விளையாட்டு முதல் படிப்பு வரை உள்ள சிரமங்கள் போன்ற பிரச்சனைகளை யதார்த்தமாக ஆவணப்படுத்தியுள்ளனர்.

ஆவணப்படம் குறித்து பேசிய சி.பி.எம்., கட்சியின் மாநில செயர்குழு உறுப்பினர் பாலபாரதி, "குப்பையைக் கூட்டி குப்பைத் தொட்டியில் போடுவதைப்போல சி.எம்.சி., காலனி மக்களை குப்பையில் மாநகராட்சி போட்டுள்ளது. மேலும், சி.எம்.சி., காலனியில் மட்டும் பிரச்சனையல்ல. இது ஒட்டுமொத்த தமிழகத்திலும் இருப்பதாகும். கிராமப்புறங்களில் நிறைய வீடுகள் இடிந்த நிலையில், இருப்பதால் அதற்கும் தீர்வு ஏற்பட வேண்டும் துப்புரவு பணியாளர்கள் இடமாற்றத்தால் பேருந்து செலவு, கல்வி, காய்கறிகள் உள்ளிட்டவற்றிற்கு மிகவும் சிரமப்படுவார்கள்," என்றார்.

மேலும், துப்புரவு பணியாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் உள்ளதால் அரசு துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் பகுதியிலேயே வீடு கட்டி கொடுத்திருக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களின் பிரச்சனை ஒட்டுமொத்த சமூகத்திற்குமானது. அதனை சாதிய பிரச்சனையாகப் பார்க்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். 

சி.எம்.சி., காலனி மக்களின் துயரங்களை விவரிக்கும் இந்த ஆவணப்படத்தை பாலபாரதி வெளியிட, அதனை பி.யு.சி.எல்., தேசிய குழு உறுப்பினர் நா. பாலமுருகன், வழக்கறிஞர் சரவணன், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் நாகராசன் மற்றும் ஜனநாயக சுகாதாரப் பணியாளர்கள் மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...