கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் சாய்பாபாகாலனி பகுதியில் கள்ளநோட்டு அடித்த இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை: மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சாய்பாபாகாலனி பகுதியில் கள்ள நோட்டு அடித்த இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சுலைமான் மகன் கிதர் முகம்மது (65) மற்றும் சிறுமுகை ராமசாமியின் மகன் சுந்தர்ராஜ் (37) ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட்டு வந்தனர். இவர்கள் இருவர் மீதும் தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கள்ள நோட்டு வழக்குகள் உள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதியன்று சாய்பாபாகாலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ள நோட்டு தயாரித்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பொது மக்களுக்கும் பொது ஒழுங்கிற்கும் பாதகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் இருவர் மீதும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.