கோவையில் கொள்ளையனை பிடிக்கச் சென்ற நபருக்கு கத்திக்குத்து

கோவை: சுங்கம் பைபாஸ் சாலையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றவரை பிடிக்க முயன்ற நபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: சுங்கம் பைபாஸ் சாலையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றவரை பிடிக்க முயன்ற நபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள சிவராம் நகரில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இன்று அதிகாலை உண்டியலை உடைத்து பணத்தை திருடியதாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கிடைக்க உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருடனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது கோவிலின் அருகே கிருஷ்ணகுமார் என்பவர் திருடனை தேடிக்கொண்டிருந்த போது மறைந்திருந்த திருடன் கிருஷ்ணகுமாரை தோள் பட்டையில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் கிருஷ்ணகுமார் சத்தமிட அருகில் இருந்தவர்கள் திருடனை விரட்டிப் பிடித்தனர்.



பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பீளமேட்டை சேர்ந்த ருத்ரன் என்பதும், அவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு மற்றும் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ருத்ரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...