நீலகிரியில் கிராமந்தோறும் காவல்துறை சார்பில் புகார் பெட்டி: பொதுமக்கள் வரவேற்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் வசதிக்காக, கிராமந்தோறும் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் வசதிக்காக, கிராமந்தோறும் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் முதல்முறையாக கேத்தி உள்ளாடா என்ற பகுதியில் பொது மக்களின் பிரச்சினைகளை தெரிவிக்க காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.



காவல்நிலையம் வர முடியாத பொதுமக்கள் தங்கள் புகார்களை இந்தப் பெட்டியில் போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் பெட்டியை

காலை ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல்துறையினர் திறந்து பார்ப்பார்கள். புகார்கள் ஏதேனும் இருப்பின், அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஊட்டி துணை காவல்துறை கண்காணிப்பாளர் திருமேனி, கேத்தி காவல் ஆய்வாளர் விநாயகம், காவலர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...