திருப்பூர்: உடுமலையில் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது
திருப்பூர்: உடுமலையில் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது தொகுதி நிதியிலிருந்து தார் சாலை, குடிநீர் குழாய், சமுதாய நலக் கூடம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக ரூ. 74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இந்த நிலையில், பெரியகோட்டை மற்றும் சின்னவீரம்பட்டி ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளுக்காக இன்று பூமி பூஜை நடைபெற்றது. பணிகளைத் துவக்கி வைத்த அமைச்சர் ராதாகிருஷ்ணன், சாலைகள் தரமானதாகவும், மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரும் வகையில் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தனது தொகுதியில் அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.