கோவையில் ஊதிய உயர்வு கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்திய தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள்

கோவை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

கோவை:  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் கோவை, கமுதகுடி, காளையார் கோவில் ஆகிய இடங்களில் 7 பஞ்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சாலைகளில் பணிபுரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கக் கோரி கடந்த 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் 6-வது நாளாகத் தொடர்ந்து வருகின்றது. வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடத்தப்பட்ட முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் நிலையில் கோவை சி.எஸ்.டயிள்யூ ஆலை முன்பாக தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தேசிய பஞ்சாலை கழக ஆலை நிர்வாகம் உடனடியாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 6 நாட்களாக தமிழகத்தில் உள்ள தேசிய பஞ்சாலை கழக ஆலைகளில் பணிகள் முடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...