நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான விடுதி உள்பட பல சொகுசு விடுதிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மசினகுடி, சோலூர் கிராமங்களில் யானைகள் வழித்தடங்களை மறித்து கட்டப்பட்டுள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 12-ம் தேதி 27 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மீதமுள்ள 11 தங்கும் விடுதி உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து முறையிடலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து விடுபட்ட அந்த 11 தங்கும் விடுதிகளுக்கும் இன்று நோட்டீஸ் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.

குறிப்பாக, இந்தி டிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான 'மொனார்க்' எனும் தங்கும் விடுதிக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். தொடர்ந்து, மற்ற தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த 48 மணிநேரத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.