கேரளாவுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பியது இந்திய கம்யூனிஸ்ட்

கோவை: கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது.

கோவை: கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வரும் சூழலில் பல்வேறு அமைப்பினர் அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, துணிகள், மருந்துகள் ஆகியவற்றை சிரியன் சர்ச் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று காலை அனுப்பி வைத்தனர். மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமையில் இந்த நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும், கட்சி தொண்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வசூல் செய்த 3 லட்சம் ரூபாய் பணத்தை திருச்சூர் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்தனர் அக்கட்சியினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...