பாசக்கார யானைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த பாசக்கார பொதுமக்கள்

நீலகிரி: கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களோடு மக்களாக வலம் வந்த மக்னா யானை நேற்று (வெள்ளிக்கிழமை) செப்டிக் டேங்கிற்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி: கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களோடு மக்களாக வலம் வந்த மக்னா யானை நேற்று (வெள்ளிக்கிழமை) செப்டிக் டேங்கிற்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. 



40 வயதைக் கடந்துவிட்ட மக்னா-வுக்கு மக்களை அச்சுறுத்தும் வழக்கம் கிடையாது. இதனால் காட்டு யானை என்றும் பாராமல் அந்த யானைக்கு நீலகிரி மாவட்ட மக்கள் அதற்கு தென்னை மட்டை மற்றும் பலாக்காய்களை வழங்கினர்.

அதனை ஆசியோடு உண்டு வாழ்ந்து வந்தது அந்த ஆண் யானை. சிலர் அதனை காயப்படுத்திய போதிலும் அந்த யானை மனிதர்களை தாக்கவில்லை. மாறாக அங்கிருந்த ஆட்டோக்களை சேதப்படுத்தி தனது எதிர்ப்பை வெளிக்காட்டியது.

இப்படியாக மக்கள் மீது அன்பு செலுத்தி வந்த மக்னா கடந்த (புதன்கிழமை) கூடலூர் அருகே உள்ள பாலவாடி குறிஞ்சி நகர் ஆதிவாசி காலனிக்கு சென்றது. அப்போது அங்கிருந்த கழிவு நீர் தொட்டி மீது எதிர்பாராதவிதமாக கால் வைத்துள்ளது. அப்போது காங்கிரீட் மூடி உடைந்து யானையின் முன்னங்கால் கழிவு நீர் தொட்டியில் இறங்கியது.



இதனால் குழந்தை தவழும் நிலையில் விழுந்த மக்னா, அங்கிருந்து எழ முடியாமல் பரிதவித்தது. நாள் முழுவதும் அங்கேயே உயிருக்குப் போராடிய மக்னா பரிதாபமாக பலியானது.

அன்பாகச் சுற்றித்திரிந்த மக்னா உயிரிழந்ததை பொதுமக்களால் ஏற்க முடியவில்லை. பலரும் வேதனை தெரிவித்து வந்த நிலையில், தற்போது மக்னா உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்னா யானைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மண்ணை விட்டுப் பிரிந்தாலும், மக்கள் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்தது இந்த மக்னா. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...