கோவையின் குளங்களில் மிதக்கும் சடலங்கள் : அச்சப்படும் மக்கள்

கோவை: மாநகரில் உள்ள குளங்களில் கடந்த சில மாதங்களாக மர்மமான முறையில் இறந்த உடல்கள் மிதப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

கோவை: மாநகரில் உள்ள குளங்களில் கடந்த சில மாதங்களாக மர்மமான முறையில் இறந்த உடல்கள் மிதப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

கோவையில் கொளராம்பதி, நரசாம்பதி கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்னன் குளம், செல்வசிந்தாமணி குளம், கங்கநாரயண சமுத்திரம், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் என 20-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.



இதில் ஒரு சில குளங்களில் மட்டுமே, கம்பி வேலியாலான தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்புச்சுவர் அற்ற குளக்கரை ஓரங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்த செல்கின்றனர்.

இதனால், குளக்கரை ஓரங்களில் இரவு நேரங்களில் யாரும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கும் போலீசார் இரவு நேரங்களில் அப்பகுதியில் நிற்கும் நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் சென்று விசாரணை செய்கின்றனர். இப்படி போலீசார் தொடர் சோதனைகள் செய்தும் அடிக்கடி குளங்களில் பிணங்கள் மிதப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்று காலை தொண்டாமுத்தூர் சாலையிலுள்ள கிருஷ்ணாம்பதி குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

அதேபோல், பனமரத்தூர் அருகே உள்ள செல்வாம்பதி குளத்தின் ஓரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலை, கைகள் மற்றும் வயிற்றின் கீழ் பகுதிகள் வெட்டப்பட்டு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெண் உடல் மிதந்து கொண்டிருந்தது. இது அந்த உடலைக் கைப்பற்றிய போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். 

இப்படி அடிக்கடி குளங்களில் அடையாளம் தெரியாத பிணங்கள் மிதப்பது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, அனைத்து குளக்கரை ஓரங்களிலும் தற்காலிகமாக தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...