சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் உப்பு கழிவினை சுத்திகரிக்கும் முறை திருப்பூரில் அறிமுகம்

திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலைகளிலிருந்து வெளி வரும் உப்பு கழிவினை மீண்டும் பயன்படுத்தும் வகையில், சுத்திகரிப்பு முறையை அமைச்சர்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலைகளிலிருந்து வெளி வரும் உப்பு கழிவினை மீண்டும் பயன்படுத்தும் வகையில், சுத்திகரிப்பு முறையை அமைச்சர்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர்.



சாய ஆலைகளிலிருந்து வெளியேறும் சாயக்கழிவு நீரில் உப்பைப் பிரித்தெடுத்த பிறகு, எஞ்சிய கழிவு உப்பில் உள்ள சோடியம் சல்பேட் மற்றும் சோடியம் குளோரைடு உப்புக்களை தனித்தனியாக பிரித்தடுத்து மறு உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, குப்பாண்டம்பாளையத்தில் உள்ள சின்னக்கரை பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் சார்பில், ‘உப்புக்கழிவு அற்ற சுத்திகரிப்பு முறை’ திட்டம் முதன் முறையாக திருப்பூரில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 



இத்திட்டத்தை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன், கைத்தறித்துறை அமைச்சர் மணியன், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சின்னக்கரை பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் மேலாண்மை இயக்குநர் சண்முக சுந்தரம், திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், கைத்தறித்துறை அமைச்சர் ஒ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- இதுவரை சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் இறுதியாகும், சோடியம் சல்பைட் ஆகியவை சந்தைகளில் விற்க முடியாமல் கிடந்தன. இதனை தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் சோடியம் சல்பைடு மற்றும் சோடியம் குளோரைடாக இரண்டாக பிரித்து எடுக்க முடிகிறது. இதனைப் பிரித்தெடுக்க 18 பைசா செலவாகிறது. ஆனால், அதில் 15 பைசா நமக்கு திருப்பி கிடைத்து விடுகிறது. 3 பைசா மட்டுமே செலவாகிறது.



எனவே, இங்கு குவிந்து கிடக்கும் உப்பை, சந்தையில் விற்பனை செய்யும் போது இடம் சுத்தமாகிறது. மாசு இல்லாத சூழல் உருவாகிறது. இதன்மூலம், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து சாயக்கழிவு ஆலைகளில் இருந்தும் கழிவுகள் பெறப்பட்டு சுத்திகரிக்க முடியும். திருப்பூரில் ஜீரோ டிஸ்சார்ஜ் பணிகள் எந்த குறையும் இன்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காவிரி நீர் அனைத்துக் கடைமடை பகுதிகளுக்கும் சென்றுவிட்டது. காவிரி திறப்பிற்கு பின்னர் டெல்டா மாவட்டங்களில் மழை இல்லை. இதுவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமாக உள்ளது, என்றார்

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...