"முல்லைப் பெரியாற்றில் 142 அடியை இருப்பு வைக்கக் கூடாது என்பதற்காகவே வீண்பழி சுமத்துகிறது கேரளா"

திருச்சி: முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்கக் கூடாது என்பதற்காகவே கேரள அரசு தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டை முன் வைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


திருச்சி: முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்கக் கூடாது என்பதற்காகவே கேரள அரசு தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டை முன் வைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் உடைந்த 9 மதகுகளை நேரில் ஆய்வு செய்தார். 

ஆய்வுக்குப் பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்காததால், வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. பல்வேறு அணைகளில் இருந்து அதிகளவில் உபரிநீர் வந்ததன் காரணமாக கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. 

முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்கக் கூடாது என்பதற்காகவே கேரள அரசு தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறது. கேரளாவின் 80 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது, இவ்வாறு அவர் கூறினார். 

இதனிடையே, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணமல்ல. இடுக்கி பகுதி வெள்ளத்திற்கு கேரள அரசுதான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை ஆக.31 வரை 139.9 அடியாக தொடர்ந்து பராமரித்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிக்கப்படாமல் இருப்பதை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கு விசாரணையை செப். 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...