நீலகிரியில் அக்கார்டு நிறுவனத்தின் விடுதிகளுக்கு 48 மணிநேரத்தில் சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அக்கார்டு நிறுவனத்துக்கு சொந்தமான விடுதிகளுக்கு 48 மணிநேரத்தில் சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அக்கார்டு நிறுவனத்துக்கு சொந்தமான விடுதிகளுக்கு 48 மணிநேரத்தில் சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடலூர் அருகே தேவாலா கிராமத்தில் 180 ஏக்கரை அக்கார்டு எனும் நிறுவனம் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட வருவாய் அதிகாரி அறிவிப்பாணை வெளியிட்டார். இதனை ரத்து செய்யக் கோரி, அக்கார்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், 48 மணிநேரத்தில் அந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ள நிரந்தர கட்டிடங்களுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஆணையிட்டார். 

மேலும், பழங்குடியினர் வசிக்கும் வனப்பகுதியில் ரிசார்ட் போன்ற வர்த்தக கட்டுமானங்கள் கட்டப்பட்டது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரசுக்கு உத்தரவிட்டார். அதேபோல, காலியிடத்தை 2 நாட்களில் அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென அக்கார்டு நிறுவனத்திற்கு ஆணையிட்ட நீதிபதி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...